தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குறித்த வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக, அனூப் பர்னவால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்படும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே கொலிஜியம் போன்று புதிதாக ஒன்றை உருவாக்கி தேர்தல் ஆணையரை தேர்வு செய்யக் வேண்டும் என கோரி அனூப் பர்னவால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இன்று விசாரித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குறித்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.






