பெண்கள் வாழ தகுதியற்ற நாடானது இந்தியா.!! வெளியான அறிக்கையில் திடுக்கிடும் தகவல்.!!

உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பெண்கள் ரிதியிலான பாலியல் தொல்லைகள். இந்த பிரச்சனைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் பிரச்சனையாகவே உள்ளது. அந்த வகையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிட்ட அறிக்கையில் வந்துள்ள செய்தியானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிவிப்பில் பெண்கள் வேலைபார்க்கும் பணியிடங்களில் வரும் பாலியல் தொல்லைகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட போது கடந்த 2014 ம் வருடத்தில் சுமார் 371 வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்., நான்கு வருடங்கள் கழித்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 14 ஆயிரத்து 866 புகார் மனுக்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விகிதாசாரமானது 3 ஆயிரத்து 907 விழுக்காடாக உள்ளது என்று குறிப்பிட்டது. இந்த பாலியல் தொல்லைகள் வடமாநிலங்களில் பெருமளவு காணப்படுவதாகவும்., குறிப்பாக உத்திரபிரதேசம் மாநிலத்தில் அதிகமாக உள்ளதையும் குறிப்பிட்டு காட்டியுள்ளது. மேலும் உத்திரபிரதேசம் மாநிலத்தை தொடர்ந்தே தற்போது டெல்லி., ஹரியானா மாநிலங்களில் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது வெளியான இந்த அறிவிப்பால் இந்தியாவானது பெண்கள் வாழத்தகுதியில்லாத நாடக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் ட்விட்டரில் #ME TOO பிரச்சனை பயங்கரமான வகையில் வெடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.