பாலியல் புகார் குறித்து நடிகை மும்தாஜ் வெளியிட்ட அதிர்ச்சியான ரகசியம்!

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக #metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றசாட்டை வைத்தார், அவரை போலவே பல நடிகைகள் மற்றும் பெண்கள் நடிகர்கள் ஜான் விஜய், அர்ஜுன், தியாகராஜன் என தொடர்ந்து பலர் மீதும் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதனைபற்றி பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்ற பிரபல நடிகையான மும்தாஜிடம் கேட்டதற்கு அவர் , நான் படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடமும் சிலர் தவறாக நடக்க முயற்சி செய்தனர். மேலும் இயக்குனர் ஒருவர் என்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்ய முயற்சி செய்தார், அதற்காக நான் அவரை செருப்பால் அடித்திருக்கிறேன். மேலும் அவரை குறித்து நடிகர் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறேன்.

அதே போல் என்னிடம் தவறாக நடந்து கொண்டவரை பயப்படாமல் அப்பொழுதே பொதுஇடத்தில் சரமாரியாக திட்டியிருக்கிறேன். அதற்கு பின் அவர் என்னை எங்கு கண்டாலும் மரியாதையாக நடத்துவார்.

. என்னதான் நான் படங்களில் ஆபாசமாக உடை அணிந்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. என்னை பொது இடங்களில் யாரும் தவறாக தொட்டது கிடையாது.

மேலும் எப்பொழுது என் அம்மா கூடவே வருவார். வரமுடியவில்லை என்றால் பாதுகாப்பிற்காக என்னிடம் மிளகாய் தூள் கொடுத்து அனுப்புவார். நான் இதுவரை பாதிக்கபடவில்லை, மேலும் அதனால் நான் யார் மேலும் புகார் செய்ததில்லை என மும்தாஜ் கூறியுள்ளார்.