இத்தாலியில் சிறை பிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: அதிர்ச்சி காரணம்??

இத்தாலியில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட பிரித்தானிய தம்பதியை திருமண அரங்கில் ஏற்படுத்திய சேதத்திற்காக சிறை பிடித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருமண அரங்கத்தில் ஏற்படுத்திய சேதத்திற்காக சுமார், 3,500 பவுண்டுகள் செலுத்த கோரியுள்ளனர்.

கென்ட் பகுதியை சேர்ந்த ரோஸி மற்றும் ஜாக் டெவெர்சன் ஆகிய இருவரும் தமது உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு இத்தாலி சென்றுள்ளனர்.

Sorrento பகுதி அருகே நடைபெற்ற இந்த கோலாகல திருமண விழாவில் ஏற்பட்ட தீப்பொரியால், திருமண அரங்கில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து அடுத்த நாள் அங்கு சென்ற ரோஸி மற்றும் ஜாக் டெவெர்சன் ஆகிய இருவரையும் திருமண அரங்கின் நிர்வாகிகள் சிறை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, சேதப்படுத்தியதன் முழு பொறுப்பையும் தாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்வதாக அவர்கள் ஆவணங்களில் எழுதி ஒப்பமிட்டு பெற்றுள்ளனர்.

மேலும் இழப்பீடாக 3,500 பவுண்டுகள் தொகையை செலுத்திவிட்டு செல்லவும் அவர்கள் நிர்பந்தித்துள்ளனர்.

இதனையடுத்து மொபைல் மூலம் லோன் ஒன்றை எடுத்து அவர்களின் கடனை செலுத்திய பின்னரே தங்களை விடுவித்ததாகவும் ரோஸி தெரிவித்துள்ளார்.

இழப்பீடு மற்றும் எஞ்சிய செலவினங்கள் என மொத்தம் தங்களிடம் இருந்து சுமார் 8,000 பவுண்டுகள் அவர்கள் கைப்பற்றியதாகவும், கடனாக பெற்ற தொகையை செலுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக தாம் உழைக்க வேண்டும் எனவும் ரோஸி தெரிவித்துள்ளார்.