முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்!

நம்மைச் சுற்றி வளரும் செடி கொடிகளின் மூலமே நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனை நமது முன்னோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் அவற்றை பயன்படுத்தாமல் மருத்துவமனையை தேடிய அலைகிறோம்.

நமது பாரம்பரிய மருத்துவம் மறைந்து விடக்கூடாது என்பதற்கான ஒரு பதிவுதான் இது.
முடக்கத்தான் கீரை, இது மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது காலப்போக்கில் முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது.

முடக்கத்தான் கீரையானது வயல்வெளிகளில் தானாக வளர்ந்து வரும் கொடி வகையை சேர்ந்தது. இந்த கீரையானது கிராமங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது.

இன்றைய சூழ்நிலையில் பலரும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதை ஒரு கப் இட்லி மாவுடன் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிட்டு வர மூட்டு வலி பறந்து போகுமாம்.

ஒரு கட்டு முடக்கத்தான் கீரையை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின்னர் அந்த நீரை கொண்டு தலை குளிப்பதற்கு முன்பு தலை முடியை நன்கு அலசி விட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

முடக்கத்தான் கீரை சூப் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் தொந்தரவை உடனே விரட்டும் திறன் கொண்டது.