ஹரிஷ் கல்யாணின் அடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான திரைப்படம் “பியார் பிரேமா காதல்”. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிவருகிறார். ஹரிஷ் கல்யாண்ணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். காதல் கலந்த காமெடி படமாக இருக்கும். இந்த படத்தை மாதவ் மீடியா தயாரிக்கின்றனர். சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.