இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கலை, உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிச்சிடுங்க, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த குஷ்பூ.!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நடிகைகள்,திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் சராசரி பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக MeToo என்ற ஹாஸ்டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதனை பாடகி சின்மயி ஷேர் செய்து வருகிறார்.

இந்நிலையில் திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.

இந்த நிலையில், இதுமாதிரியான பாலியல் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்துள்ளீர்களா என்று நடிகை குஷ்புவிடம் ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தனர்.


அதற்கு பதில் அளித்த குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் , 40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் நான் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருக்கிறேனா என்று பலர் கேட்கின்றனர். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னியுங்கள், இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னுடைய பிரச்சனைகளை நானே அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை மட்டுமே நான் பின்பற்றினேன்.