தன் மீதான விமர்சனங்களுக்கு முன்பே வைரமுத்து அளித்த விளக்கக் கவிதை!

சென்னை

தன்னை குறித்து வரும் விமர்சனம் குறித்து கவிஞர் வைரமுத்து ஏற்கனவே ஒரு கவிதை எழுதி உள்ளார்.

பிரபல பாடகி சின்மயி சில வருடங்கள் முன்பு கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து சமூக தளங்களில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. சின்மயிக்கு வைரமுத்துவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஆதரவு அளித்ததாக செய்திகள் வந்தன. அதே நேரத்தில் அது பொய்யான தகவல் எனவும் செய்திகள் வந்தன.

வெகு நாட்களுக்கு முன்பே தன்னை பற்றிய விமர்சனங்கள் குறித்து வைரமுத்து ஒரு கவிதை எழுதி உள்ளார்.

அந்த கவிதை பின் வருமாறு :

உலகம் :

————–

மங்கையரிடையே மெளனம் காத்தேன்!

கவிஞன் என்ற கர்வம் என்றது !!

 

பெண்கள் சிலருடன் பேசத் துவங்கினேன்!

கண்களைக் கவனி காமம் என்றது !!

 

இப்படிச் செய்தால் இதுவும் தப்பு!

அப்படிச் செய்தால் அதுவும் தப்பு !!

 

கத்தும் நாய்க்கு காரணம் தேவையில்லை!

தன் நிழல் பார்த்து தானே குரைக்கும் !!

 

உலகின் வாயை மூடிடு

அல்லது உந்தன் செவிகளை மூடிடு!

 

உலகின் வாயை தைப்பது கடினம் !

உந்தன் செவிகளை மூடுதல் சுலபம் !!