நண்பனின் மனைவிக்கு ஆசைப்பட்ட நண்பன்.! மது-வுக்கு ஆசைப்பட்ட மந்திரவாதி குடும்பம்.!!

தன் மனைவியை அடைய நினைத்த நண்பனை கொள்ள நினைத்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்த மதுவை அருந்திய மந்திரவாதி உட்பட 3 பேர் உயிர் இழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள வயநாடு அருகே மானந்தவாடி நகைகடை அதிபரான சந்தோஷ் என்பவற்றின் நண்பன் சஜித்குமார். சந்தோஷ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் சஜித்குமார், சந்தோஷின் மனைவியை தனது காதல் வலையில் சிக்கவைத்துள்ளார்.

இதனையறிந்த நகைகடை அதிபர் சந்தோஷ், அவரை பழி தீர்க்க திட்டமிட்டு, தமிழக எல்லைக்கு வந்து மதுகையில் 1848 என்ற மதுபாட்டிலை வாங்கி, அதனை சீல் உடைக்காமல் லாவகமாக அதில் பொட்டாசியம் சயனைடு கரைசலை கலந்துள்ளார்.

பின் அதனை தனது நண்பன் சஜித்குமாருக்கு ஓசியில் குடிக்க கொடுத்துள்ளார். ஆனால், அந்த மதுவை சஜித்குமார் குடிக்கவில்லை. மாறாக தனது காதலியை வசியம் செய்ய, வெள்ள முண்டாவை சேர்ந்த மந்திரவாதி திகனாயை (75 வயது ) சந்தித்துள்ளார்.

மேலும் அவரிடம் விஷம் கலந்த அந்த மதுபாட்டிலை மந்திரவாதிக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார். விஷம் கலந்த மதுவை முதலில் மந்திரவாதி திகனாய் அருந்தி உள்ளார். மேலும், அவரது மகன் பிரமோத்தும், மருமகன் பிரசாத்தும் அந்த விஷம் கலந்த மதுவை குதித்துள்ளனர்.

இதில், மந்திரவாதி திகனாய் அதிகமாக குடித்த காரணத்தினால் ஆண்ட்ரே இறந்துள்ளார். அவரின் மகன் பிரமோத்தும், மருமகன் பிரசாத்தும் அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மூன்று பேரின் உடலையும் பரிசோதனை செய்து பார்த்த பொது அவர்கள் இறக்க மதுவில் பொட்டாசியம் சயனைடு கலந்த விஷத்தை குடித்தது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் போலிசாரின் தீவிர விசாரணையில் வெளிவந்துள்ளது.

‘மது உயிருக்கு கேடு’ என்று சொல்லவதற்கு ஏற்ப இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், தனி மனித ஒழுக்கம் என்பது சமூகத்திற்கு நல்ல வழியை கொண்டு செல்லும். மாறாக ஒழுக்கம் தவறும் போது தனி மனிதன் மட்டுமல்லாது, மொத்த சமூகமும் பாதிக்கப்படும் என்பதற்கும் இந்த சம்பவம் உதாரணம்.