நடிகர் விஜயகாந்துடன் கஜேந்திரா திரைப்படத்தில் நடித்த நடிகை புளோரா. இவர் நடிகர் கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குசேலன் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் தோன்றினார். இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு தகவல் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.,
அதில் தயாரிப்பாளரான கவுரங் தோஷிசும் நானும் கடந்த சில மாதங்களாகவே ஒன்றாக ஊரை சுற்றி வந்தோம். இவர் 2007 ம் வருடத்தில் வந்த காதலர் தினத்தில் என்னை கடுமையாக தாக்கி எனக்கு பாலியல் தொல்லை அளித்தார். ஒரு வருடமாக நான் கோருவதும் காதில் வாங்காமல் என்னை தொடர்ந்து பாலியல் வற்புதலுக்கு உட்படுத்தினார்.
இதனால் எனக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும், என்னை கொள்ளும் அளவிற்கும் அவர் உடலளவில் பலசாலி என்பதால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை., அவரின் ஆசைக்கு இணங்கினேன். மேலும் அவர் தாம் திரைப்பட துறைக்கு புதிதாக வந்துள்ளதால் அவரை ஒன்றும் செய்ய இயலாதென்றும் கூறினார். இதனால் அவரை விட்டு மெல்ல மெல்ல விலகத் தொடங்கினேன்.
இதனால் எனது வாழ்க்கை பாதித்தது மட்டுமல்லாமல், பிற திரைப்படங்களிலும் நடிக்க முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்., எனது வாழ்க்கையே சிதைந்து…, இதனால் கடும் மனஉளைச்சலுக்கு நான் உள்ளானேன் என்று குறிப்பிட்டுள்ளார்.