தோணிக்கே இந்த நிலைமையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அண்மையில் அரபு நாடுகளில் நடந்து முடிந்தது.

இந்த போட்டி தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியை உறுதி செய்தது. இதன் காரணமாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா, சாகல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அணியின் தற்போதைய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்த போட்டிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக செயல்பட்டார். அவரைத் தவிர வேறு யாரையும் கேப்டனாக்க முடியாத நிலையும் அணிக்கு இருந்தது.

இப்படி ஒரு சூழலை இந்திய அணி நிர்வாகம் உருவாக்கியதில் தேர்வு குழுவிற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என தகவல்கள் வந்துள்ளன. தோனிக்கு கேப்டன் பதவியை அணி நிர்வாகம் கொடுத்ததில் அவர்கள் அதிருப்பதி அடைந்தார்கள் என தகவல் வெளியாகியுள்ளன.

டோனி அந்த போட்டிக்கு முன்னர் ஏற்கனவே 199 ஒருநாள் போட்டியில் கேப்டனாக பணியாற்றியிருந்தார். இந்த போட்டியின் மூலம் 200 போட்டியில் கேப்டனாக பணியாற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார். 200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக பணியாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.