கணவனிடம் சண்டை…..! காதலனை கரம்பிடித்த பெண்.!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையை அடுத்துள்ள ஊர் பொன்னேரி. இந்த ஊரை சார்ந்தவர் சமிதா. இவருக்கும் அதே பகுதியை சார்ந்த சக்திவேல் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சென்ற ஜூலை மாதம் திருமணம் நடந்து முடிந்தது.

திருமண வீட்டில் பஞ்சாயத்திற்கும் பஞ்சமிருக்காது என்பதை போலவே குழும புகைப்படம் எடுப்பது தொடர்பாக மாப்பிளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்னையை அதோடு விடாமல் பெண்வீட்டார் தரப்பில் அவ்வப்போது மாப்பிளைக்கு பிரச்சனை அளித்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இருவீட்டாரும் சமாதானமான நிலையில் பெண் இது தொடர்பாக அவ்வப்போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் சண்டையிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

சில நாட்கள் கழித்தால் தனது மனைவி சமாதானமாகி வந்துவிடுவார் என்று கணவரும் அமைதியாக இருந்துள்ளார். ஆனால் அவர் வராததால் கணவர் தனது மாமனார் வீட்டிற்கு சென்று அவரை அளித்து வர முடிவு செய்து மனமானரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் தாம் வர இயலாது என்று கூறியுள்ளார். இதனால் அவர் திரும்பி வந்துவிட்டார்.

மனைவியுடன் சேர்ந்து வாழவும், மன உளைச்சலை குறைக்கும் பொருட்டும் சக்திவேல் திருவண்ணாமலை கிரிவலம் சென்றுள்ளார். அப்போது இவரின் மனைவி இன்னொரு ஆணுடன் கழுத்தில் கட்டப்பட்ட புதிய தாலியையும் பார்த்து, புதுமணக்கோலத்தில் வந்து கொண்டிருந்த அவர்களை பார்த்து கடும் அதிர்ச்சிக்குள்ளானர்.

இது குறித்து சமிதாவிடம் கேட்கையில் அந்த இன்னொரு நபர் அவரின் பள்ளிப்பருவ காதலன் என்றும் அவரை தற்போது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனை கேட்டு பதறிய அவர் காவல் நிலையத்தை அணுகினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சக்திவேல். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சமிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்.,

சமிதா பள்ளியில் 11 ம் வகுப்பு பயிலும் போது கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தங்களது காதலை பல்வேறு விதமாக வளர்த்து வந்துள்ளனர். அந்த வகையில் இவர்களின் காதல் வளர்ச்சி சமிதாவை கர்பத்தில் கொண்டு விட்டுள்ளது. இந்த விஷயம் இவர்களின் வீட்டிக்கு தெரிய வரவே இவரின் கர்பத்தை கலைத்துள்ளனர். மேலும் இவரை இவர்களின் உறவினர்கள் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

அங்கு வைத்தே சமிதாவிற்கும் சக்திவேலிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மறைத்து சக்திவேலிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். படிக்கின்ற வயதில் படிப்பை மறந்து விட்டு காதல் என்ற வலையில் விழுந்து., திருமணம் முடித்து பின்னர் காதலித்த நபரை கைபிடித்து, திருமணம் செய்த கணவனை கைவிட்டு காவல் நிலையத்தில் குற்றவாளியாக நிற்கவைத்துள்ளது.