மணத்தக்காளிக்கீரையின் மருத்துவ குணம்….

மணத்தக்காளிக்கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ பயன் கொண்டது. இதன் இலை, தண்டு, காய், கனி, வேர், இவை அனைத்துமே உடலுக்கு உபயோகப்படக்கூடியவை ஆகும்.

இதன் சுவை கசப்புத் தன்மை கொண்டது, ஆனாலும் சுவையாக இருக்கும். நீண்ட காலம் நோயில்லாமல் வாழ மிகவும் உதவும் மணத்தக்காளிக்கீரை.

இக்கீரையின் சாறு எடுத்து வாயினுள் விட்டு தொண்டை வரை கொப்பளித்து வந்தால், வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.

வயிற்று கோளாறு, வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு, எவ்வளவு மாத்திரை மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை என்றால், மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் வயிற்றுப் புண் விரைவில் ஆறிவிடும்.

குறைந்தது 10 நாட்களாவது, இதை பருக வேண்டும். இதை சாப்பிடும்போது உப்பு, காரம் இவற்றை முக்கால் பாகம் குறைக்க வேண்டும். மணத்தக்காளி காயை குழம்பு செய்து சாப்பிட்டால் வயிற்றுப் புண், குடல் புண் ஆறும்.

மணத்தக்காளி காயின் குணங்கள் உடலில் இருந்து சூட்டை அகற்றும், உடலிலுள்ள நச்சு நீர் வெளியேற்றும், வாந்தியை போக்கும், கர்ப்பப்பைக்கு வலிமை தரும், பிரசவத்தை சுயப்பிரசவம் ஆக்குவதற்கு உதவுகிறது.

இதே போல் தினமும் பல மருத்துவ குறிப்புகளை செய்திபுனலின் வாயிலாக பகிர்ந்து வருகிறோம். படித்து பயன்பெறுங்கள்.