2009ம் ஆண்டுடன் தமிழரின் அபிலாசையுடன் கலாச்சாரமும் மண்ணுக்கு மண்ணானது. எந்த நிலையில் இருக்கும் நிறுவனங்களும் அல்லது அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளின் போது திரும்ப எதிர்பார்ப்பது பாலியல் லஞ்சமாகவே இருக்கின்றது.
சொந்த தாயை தவிர பிறர் அனைவரையும் பாலியல் தேவைகளுக்காக அணுகும் கீழ்த்தர சிந்தனையுடன் சிலர் இருக்கவே செய்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கு அரச நிறுவனம் ஓன்றில் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவர், அந்த நிறுவனத்தில் மட்டுமல்ல, அதன் ஏனைய பிரிவு நிறுவனங்களிலும் பாலியல் தேவைகளுக்கு பெண்களை அணுகும் பண்பாடற்ற செயலில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் கலாச்சார பண்பாட்டு விழுமியத்துடன் கூடிய சூழலில் வாழ்ந்த இவரா இப்படி என்று பலரும் மூக்கில் விரலை வைக்கின்றனர்.
இவரது இந்த கீழ்த்தரமான செயலை உடன் நிறுத்திக்கொள்ளாவிடடால், இவரது மாவீரரான சகோதரரே இவருக்கான தண்டனையை வழங்குவார் என்று உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.






