‘தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்’ , ‘சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர்’ என்று இந்திய அரசாலும், தமிழக மற்றும் அண்டை மாநில திராவிட அரசுகளாலும் அறிமுகமானார், சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்த வீரப்பன்.
பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.
வீரப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் ‘அவர் கொள்ளை செய்த பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்?
‘அரசின் கண்களில் படாமல் அரசு அதிகாரிகள் கண்களில் படாமல் எப்படி இவர் இவ்வளவு பெரும் செயல்களை செய்தார்’ என்பதற்கும்.
‘அவரின் சொத்துக்களை எந்த வங்கியில் சேமித்து வைத்துள்ளார்’ என்பது போன்ற நியமான கேள்விகளுக்கு இதுவரை ஆதாரங்கள் இந்த அரசுகளால் சமர்ப்பிக்க இயலவில்லை.
மேலும் ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ என்கின்ற பெயரில் வீரப்பன் கிராமத்திற்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறை பற்றி அந்த ஊர் மக்கள் செய்த புகார்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தகவல் இல்லை.
இவர் கொல்லப்படும் வரை இவரை பிடித்து கொடுப்பவர்க்கு 5 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி அரசின் பிரச்சாரங்களிலும் நடவடிக்கைகளிலும் மக்களுக்கு நம்பிக்கையற்ற இந்த சந்தர்பத்தில் கடத்தல்காரனாக மட்டும் காண்பிக்கப்பட்ட வீரப்பனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய காவல்துறை யாரை காப்பாற்ற வீரப்பனை கொன்றது. வீரப்பனோடு சேர்த்து பல உண்மைகளையும் கொன்றுள்ளது காவல்துறை.
இறுதியாக முதுகில் குத்தும் முடிவை கையில் எடுத்து வீரப்பன் மனைவியுடன் சண்முகப்பிரியா என்ற பெண்ணை நெருங்கி பழக விட்டுள்ளது அதிரடிப்படை.
அவரிடம் இருந்து வீரப்பன் தொடர்பான தகவல்களைப் பெற்று அதிரடிப் படையினருக்குத் தெரிவித்தார். குறிப்பாக வீரப்பன் நடமாட்டம் குறித்தும் வீரப்பனுக்குக் கண் பார்வை குறைந்திருப்பது குறித்தும் தகவல்களைச் சேகரித்து அதிரடிப் படையினரிடம் கொடுத்தார்.
இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர்.
வீரப்பனை பிடித்து கொடுத்தால் 5 கோடி பணமும், வீடும் தருவதாக சொன்ன அரசாங்கம், இன்னும் காலம் தாழ்த்தி கொண்டே வருவதாக சண்முகப்பிரியா கூறியுள்ளார்.
மேலும், தற்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்னை போன்ற பல சிக்கல்கள் இருக்கின்றன.
எனவே, எனக்கு மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு திரைப்பட இயக்குனரை நம்பி நிம்மதியை இழந்து விட்டேன். இனி நான் வாழ அரசு நிதியுதவி தந்து உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.