நாளை பிரதமரை சந்திக்கும் முன் முதல்வர் பழனிசாமி முக்கிய சந்திப்பு!

கடந்த ஒரு வார காலமாகவே தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவதற்காக விரைவில் பிரதமரிடம் கலந்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வந்தது.

பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு குறித்து பிரதமர் அலுவலகம் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து பேச இருப்பதாக சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பர்க்கபட்டது.

இந்நிலையில் நாளை பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதால் முதல்வர் பழனிசாமி இன்று மாலை டெல்லி சென்றுள்ளார். நாளை பிரதமரை சந்திக்கும் முன் நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்பிக்களை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் சற்றுமுன் வந்துள்ளன. இதில் கட்சி சார்பாக சில முக்கிய முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.