துடி துடித்த கல்லூரி பேராசிரியை… வரம்பு மீறிய வழக்கறிஞர் கணவன் – இருவருமே உயிரை விட்ட சோகம்.

குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் டால்டன் செல்வ எட்வர்ட். இவர் மனைவி ஜெகதீஷ் ஷைனி.

அஞ்சுகிராமத்தில் உள்ளஅரசு கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன.

இருவருக்கும் இடையே அடிக்கடிகுடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். சம்பவ தினத்தன்று தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் டால்டன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகதீஷ் ஷைனியை அருகிலுள்ளோர் மீட்டு,நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் டால்டன் செல்வ எட்வர்டை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அவரதுஉயிரற்ற உடல் கர்நாடக மாநிலம்மண்டியா அருகில் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மனைவியை வெட்டிய டால்டன் காவல் துறையினருக்கு பயந்து கர்நாடகாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு கைதுக்கு பயந்து ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கர்நாடகா சென்ற தமிழக காவல் துறையினர் அவரது உடலை குமரிக்கு கொண்டுவந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஷ் ஷைனி வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இ

தனை தொடர்ந்து உடற்கூறாய்வுக்குப் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்துபோன டால்டன்செல்வ எட்வர்ட்,ஜெகதீஷ் ஷைனி தம்பதியினரின் இரண்டு குழந்தைகள் பெற்றோர் இன்றி தவிக்கின்றனர்.