TELOவை அடித்துக் கலைத்த மக்கள்!!

யாழில் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் வீரச்சாவடைந்த தினமான நேற்று நினைவுத்தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கருணாநந்தராசா ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட இருந்தது.

இந்த நிலையில் அங்கு அடிதடி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான காணொளியொன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையில் ஆளும் தரப்பினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக குறித்த நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் நேற்று காலை இடம்பெற்றபோது வல்வெட்டித்துறை நகரசபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து இதை இடைநிறுத்துமாறு கூறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இரு தரப்பினர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் அடிக்கல் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்பொழுது குறித்த இடத்தில் இடம்பெற்ற அடிதடி பதிவாகிய காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.