இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இது முதல் போட்டியானது, நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் ஆரம்பித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 649 ரன்களை குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மலமலவென விக்கெட்களை பறிகொடுத்து, 181 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆக அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். அவர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பாலோ-ஆன் ஆன வேஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது.
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்களை கைப்பற்றினர். இதன் மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 333 விக்கெட்டுக்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டெனால்டை பின்னுக்கு தள்ளி 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அளவில் அஸ்வீன் நான்காவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்களுடனும், இரண்டாவது இடத்தில கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடனும், மூன்றாவது இடத்தில ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடனும் உள்ளனர். அதேபோல் சர்வதேச சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வீன் 7-வது இடத்தில் உள்ளார்.







