எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாகஅமமுக அமைப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன், ”கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்ததன் படி அவரை சந்தித்தேன் என்றும், அப்போது அவர் என்னிடம், தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் கூறினார்.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் என்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். மேலும், அவர் எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டு, என்னை முதல்வராக்க பன்னீர்செல்வம் விரும்பினார்” என்றும் தினகரன் பரபரப்பு பேட்டியளித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் தினகரன் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மைதானா.? என்பது குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.