அண்ணா பல்கலைக்கழக பேராசிரியைக்கு நேர்ந்த சோகம்..? படுக்கையில் கண்ட அகோர காட்சி.!

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் சென்னை திருவான்மியூரை சேர்ந்த 56 வயதான மீராஆஷா மேனன்.

இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தை பாக்கியம் இல்லாததால் தனிமையில் வாழ்ந்து வந்தார். மீராஆஷா மேனன்.

கடந்த 4 வருடமாக பணிக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். பித்து பிடித்தது போல வெளியில் யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களாக வீட்டிற்கு வெளியேயே முகம் காட்டாமல் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் திடீரென்று பூட்டிக்கிடந்த அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

கதவு உள்ளே தாழ்பாள் போடப்பட்டு உள்புறமாக பூட்டி இருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு மீரா ஆஷா மேனன் படுக்கை அறையில் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கணவரும் இறந்து விட்டார். குழந்தைகளும் இல்லை. உறவினர்களும் கைவிட்டு விட்டதால் அவரை கவனிக்க யாரும் உடன் இல்லாததால் உடல்நல குறைவால் அவர் இறந்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.