யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆவா குழுவின் உறுப்பினர்களை கைதுசெய்யும் நோக்கில் சில பொலிஸ் குழுக்கள் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் மட்டும் 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆவா குழுவினர் பயன்படுத்துவதாக கூறப்படும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆவா மற்றும் தனுரொக் குழுவினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகளிலும் வாள்வெட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.







