நீதிபதி மனைவிக்கு மல்லி பூ, அல்வா பார்சல்.! திடீர் பரபரப்பு.!

ஆண், பெண் உறவு பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு அளித்தார். பல்வேறு அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புகுழு செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட தலைவர்கள் கடலூர் தேவா, விழுப்புரம் பாலாஜி முருகன், புதுவை மாநில தலைவர் மஞ்சினி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு கூடினர்.

அங்கு அவர்கள் ஆண், பெண் உறவு பற்றி தீர்ப்பு அளித்த தீபக்மிஸ்ராவின் மனைவிக்கு டெல்லியில் இருக்கும் அவரது முகவரிக்கு அனுப்புவதற்காக அல்வா மற்றும் மல்லிகை பூ ஆகியவற்றை பார்சல் செய்தனர்.

அவர்கள் அந்த பார்சலை அனுப்ப தபால் நிலையத்துக்குள் சென்றனர். இதை அறிந்த விழுப்புரம் நகர காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பார்சல் அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புக்குழு செயலாளர் ஆசைத்தம்பி, தேவா, பாலாஜி உள்பட நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த அல்வா மற்றும் மல்லிகை பூ பார்சலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு உண்டானது.