இந்தோனேசியாவை தொடர்ந்து இந்தியாவிற்கும சுனாமி எச்சரிக்கையா???

இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தில் கடந்த 27-ந்தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பலு என்ற கடற்கரை நகரத்தை சுனாமி பேரலைகள் தாக்கி துவம்சம் செய்தன.

இந்தநிலையில், அந்தமான் தீவுகளில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.!

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் உருவானது. இந்த நிலநடுக்கம் சரியாக 6 மணி 54 நிமிடங்களில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் பற்றி தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.!