இன்று கோவை விமான நிலையம் வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக உருவகம் என்றும் இந்த திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது என்றும் தெரிவித்தார். மேலும் விவசாயிகளைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்வும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசுவோம் எனவும் தமிழக நலனையும், விவசாயிகள் நலனையும் பாதுகாக்கும் கட்சியாக அதிமுக என்றும் இருக்கும் எனவும் அவர் கூறினார்.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலைப்போல, வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிடும் மேலும் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கும் முடிவு என ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்கும், என்னுடைய கருத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. அதேசமயம் அதிமுகவுக்கு அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெரும் பலம் உள்ளது எனவும் அவர் கூறினர்.,
பாஜக,எங்களுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறதா என்பது குறித்து எனக்கு தெரியாது. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து, தேசிய கட்சிகளுக்கு என்றுமே இடமில்லை எனவும் தம்பிதுரை கூறினார்.






