தகாத உறவு குற்றமில்லை என்ற தீர்ப்பு நியாயமானது – கமல்ஹாசன் பேட்டி.!

ஓரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டதனை தொடர்ந்து, திருமண பந்தத்தினை கடந்து வேறு ஒருவருடன் உறவு வைத்துக்கொள்வதென்பது கிரிமினல் குற்றமில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பரபரப்பு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

பாரத கலாச்சாரங்களை, அதன் தொன்மங்களை சீரழிக்கும் வகையிலான இத்தகைய தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்குவது ஏன்? இந்து சமய பற்றாளர்கள் மேற்கண்ட தீர்ப்புகள் குறித்து அதிருப்தி கருத்துக்களை தெரிவித்துவரக்கூடிய சூழலில், தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை தாம் முழு மனதாக வரவேற்பதாக தெரிவித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பின் தலைவருமான கமல் ஹாசன்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை என்ற தீர்ப்பு நியாயம் தான். இந்த விவகாரங்களில் நாம் முன்னேறிச்செல்ல வேண்டியுள்ளது. புராணங்களில் கூட இந்த அளவு திறந்த மனது நமக்கு இருந்திருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், ஆண், பெண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக தான் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

கமலின் மேற்கண்ட கருத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் உள்ளிட்டோர் மிக கடுமையாக விமர்சித்துள்ளனர்.