பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நாளை ஒளிபரப்பாக உள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. Bigg Boss 2 title winner details revealed

இதில் பெரும்பான்மையான பார்வையாளர்கள் எதிர்ப்பார்த்த போல ரித்விகா வெற்றி பெற்றதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆடியன்ஸ்கள் பதிவு செய்த டுவீட்டுகளிலிருந்து தெரிகிறது.

ரித்விகாவிற்கு கடந்த வியாழக்கிழமை வரை கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களும், ஐஸ்வர்யாவுக்கு 80 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களும் கிடைத்துள்ளது. ஜனனி மற்றும் விஜயலட்சுமி இவர்களை விட குறைவான வாக்குகளே பெற்றிருந்தனர். இதனால் ரித்விகாவே வெற்றி பெறுவார் என ஓரளவு யூகிக்கக்கூடியதாக இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிலே ஆபாசமாக உடை அணியாமல், பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தார் ரித்விகா. இதனால் அவரது நேர்மைக்குத்தான் இந்த டைட்டில் கிடைத்துள்ளதாக டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிந்து வருகின்றனர்.

இன்று சற்று முன்னர் 4 ஆவது இடத்தை பிடித்த ஜனனி வெளியேற்றப்பட்டார். 3 ஆவது இடத்தை விஜயலட்சுமியும், இரண்டாவது இடத்தை ஐஸ்வர்யாவும் பெற்று கொண்டதாக தெரிய வந்துள்ளது.