சிம்பு படத்தில் கேத்ரீக் தெராஸா?

தெலுங்கில் திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யான், சமந்தா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அட்டாரிண்டிகி தாரேடி’. மேலும் இந்தப் படத்தில் பிரனிதா, நதியா முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படம் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தமிழில் ரீமேக்கிக் கொண்டிருக்கிறார் . சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சுந்தர். சி இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் தற்போது ஜியார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் பிரனிதா நடித்த கேரக்டரில் நடிக்க கேத்ரின் தெரெஸா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வரும் ஆண்டு ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.