பேஸ்புக் உருவாக்கியவரின் கணக்கே அழிக்கப்படுகிறது.. இனி பேஸ்புக்கின் நிலமை..?

கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக். தொடர்ச்சியாக ஆர்குட், யாகு சாட் என்று பல சமூக வலைதளங்களை விழுங்கி இன்றைக்கு சமூக ஊடக உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

இதுவரை எந்த வித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த பேஸ்புக் நிறுவனம், கேம்ப்ரிஜ் அனலிடிகா பிரச்சனைக்கு பிறகு உலகெங்கிலும் பல அதிர்வலையை எதிர்நோக்கி வருகிறது.

அமெரிக்கா தேர்தலின் முடிவை பேஸ்புக் தரவுகள் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆரம்பித்தது பேஸ்நிறுவனர் மார்க்-கு சனி. அதிலிருந்து ஒவ்வொரு நாட்டின் நாடாளுமன்ற படியாக ஏறி தன் தரப்பு நியாயம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.

இந்த நிலையில் தைவானைச் சேர்ந்த ஹேக்கரான சாங் சி-யுவான், பேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கையே டெலீட் செய்து, அதை லைவ் வீடியோவாகப் பதிவுசெய்வேன் என்று சாவல் விடுத்துள்ளார்.

சாங் சி-யுவான் ஜப்பான் நிறுவனமான லைன் கார்ப்பின், சிறந்த மென்பொருள் தவறுகள் கண்டுபிடிப்பவர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டவர்.

இவர் சமீபத்தில் ஒரு முகநூல் பதிவில் ‘பேஸ்புக் நிறுவனர் மார்க்கின் கணக்கை டெலீட் செய்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளேன், லைவ்வை காணத் தயாராகுங்கள்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பல சிக்கலில் தவிக்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இது மேலும் பேரிடியாக அமைந்துள்ளது.