காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு துரோகமும், பெற்ற குழந்தைகளுக்கு விஷமும் கொடுத்து கொலை செய்த அபிராமியின் நிலை படுமோசமான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்ட அபிராமி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
முன்னதாக குழந்தைகளைக் கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று அபிராமி தங்கியிருந்ததாக அவரது தந்தை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
அப்போதே போலீசிடம் போயிருந்தால் கூட என் பேரப்பிள்ளைகள் இன்று உயிருடன் இருந்திருக்குமே என்று கண்ணீருடன் கூறினார்.
இந்த நிலையில் சிறையில் அபிராமி கர்ப்பமாக இருப்பதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.
அதில் சிறையில் செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.