ரித்திகாவுக்கு எதிராக நடக்கும் பித்தலாட்டம்..! மொத்தமாக வெளியான தகவல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் வட மாநிலங்களில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், தமிழில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 -ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியை, கமல்ஹாசன் இரண்டாவது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் கலாசாரத்திற்கு எதிராக இந்த நிகழ்ச்சி உள்ளது என்று சமூக ஊடங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது.

இதில் தமிழ் பெண்ணான ரித்விகா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். இதற்காக தொடர்ந்து மக்கள் ஒட்டு போட்டு வருகின்றனர்.

ஆனால், இதில் ஐஸ்வரியாவை வெற்றி பெற வைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகிறது.

நேற்று வரை ஓட்டு எண்ணிக்கையை வெளிப்படையாக தெரிவித்து வந்த அந்த தனியார் சேனல் தற்போது காலம் கடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி தமிழ் பெண்ணிற்கா அல்லது பிக்பாஸ் வீட்டு மருமகளுக்கா என பொருத்திருந்து பார்ப்போம்.

இதுவரை பெற்றுள்ள ஓட்டுகள் விவரம்:

ரித்விகா – 83 லட்சத்து 11 ஆயிரம்
ஐஸ்வர்யா – 46 லட்சத்து 56 ஆயிரம்
விஜி – 22 லட்சத்து 89 ஆயிரம்
ஜனனி – 19 லட்சத்து 62 ஆயிரம்