துபாயில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லிக்கு ஓய்வுக்கு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை இந்திய அணியை வழி நடத்திச் செல்கிறார்.
இந்த போட்டி தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.
ஹாட்ரிக் வெற்றியை கொண்டாட இந்திய அணி இந்த ஆட்டத்திலும் முனைப்புடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் ஆறுதல் வெற்றிக்காக ஆடும் இந்த ஆட்டத்திலாவது எப்படியாவது வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இளம்வீரர்களை கொண்டு வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியை சமாளிப்பது ஆப்கானிஸ்தான் அணிக்கு பேரும் சவாலாக இருக்கும். இன்று நடக்கும் போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.








