1765 எம்பி., எம்எல்ஏக்களின் எதிர்காலம்.!

நாட்டில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடரப்பட்டாலே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தியா முழுக்க சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தமாக 4896 உள்ளனர். இவர்களில் 36 % பேர் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதாவது 1765 பேர் எம்பி., எம்எல்ஏக்கள் மீது மொத்தமாக 3045 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது போல் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் 1765 பேர் எம்பி., எம்எல்ஏக்களின் பதவிகள் பறிக்கப்படும். எனவே இன்று (25.09.2018) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான பென்ச் அளிக்கப்போகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் சற்றுமுன், ”குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது” உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கியுள்ளார்.