‘கட்டிப்பிடி வைத்தியர்’ சினேகனுக்கு ஜோடி யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ் இதன் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஓவியா. இவர் அந்நிகழ்ச்சியில் தனது குழந்தை போன்ற மனதாலும், வெளிப்படையான குணத்தாலும் மக்களிடையே ஏகப்பட்ட வரவேற்பை பெற்றார்.மேலும் ரசிகர்கள் ஓவியா ஆர்மி அமைத்து அவரை பெருமைப்படுத்தினர்

பின்னர் அந்த நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலித்து மனமுடைந்த நிலையில் போட்டியை விட்டு வெளியேறினார்.

மேலும் நிகழ்ச்சியில் மற்றுமொரு பங்கேற்றவர் கவிஞர் சினேகன். 2500 பாடலுக்கு மேல் எழுதிய கவிஞர் சினேகன் இந்த போட்டியில் பங்கேற்கும் அனைவரையும் கட்டிப்பிடித்துக் கொண்டே இருப்பதால் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு பிரபலமானார். இந்த நிலையில் சினேகன் தற்போது ‘பனங்காட்டு நரி’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இதனை யமுனா படத்தை இயக்கிய இ.வி கணேஷ்பாபு இயக்குகிறார். இதில் சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க உள்ளார். இது ஓவியாஆர்மி மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் இதுகுறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகனுக்கு படவாய்ப்புகள் குவிந்த நிலையில் உள்ளதால் சினிமா துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.