கேரளாவில் கடந்த மாதம் கன மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் சமூகவலைத்தளங்களில் பல கேரள மாநில இளைஞர்களுக்கும், தமிழக இளைஞர்களுக்கு காணொளி மூலம் போர் நடந்தது.
அப்படி என்ன போர்.? தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் கேரள பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், தனக்கு பெண் தருவீர்களா என்றும் வீடியோ மூலம் கேட்டுள்ளார்.
அதற்கு கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் உங்களுக்கு கேரள பெண் கேட்கிறதா? உங்களுக்கு கேரள பெண்களை தர முடியாது என்றும், தமிழக பெண்களை தரக்குறைவாக அழகு குறித்துப் பேசியும் வீடியோ வெளியிட்டனர்.
இதற்க்கு தமிழ் இளைஞர்களும் வாக்குவாதம் செய்து வீடியோ வெளியிட்டனர். தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழக பெண்களும் காணொளிகள் பதிந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
ஒரு வழியாக இந்த பிரச்சினை முடிந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் கண்ணடித்து பிரபலமான நடிகை ‘பிரியா பிரகாஷ் வாரியர்’ நடித்த ‘ஒரு அடர் லவ்’ படத்தின் “பிரீக் பெண்ணே” என்ற பாடல் யூ டுயூப்பில் வெளியானது.
இந்த பாடலுக்கு மொத்தமாக சேர்த்து 497000 டிஸ் லைக்குகள் வாங்கியுள்ளது. இதனை தமிழக இளைஞர்கள் கொடுத்து இருப்பார்களோ என்ற சந்தேகம், கேரளா இளைஞர்களுக்கு தற்போது எழுந்துள்ளது.
இருப்பினும் இதுவும் கூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.






