பாண்டிச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் நிரவி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் கோவில் தெருவைச் சார்ந்தவர் சரசன் வயது 33. இவர் மின்சாரம் சார்ந்த பணியில் பணியாற்றி வருகிறார்.
இவரது தெருவில் அவரது உறவினர் வீட்டிற்கு வந்த இளம் பெண்ணிடம் ( வயது 23 ) இவர் அந்த வீட்டிற்கு செல்லும் போது பேசி பழகி வந்துள்ளார். இந்த பழக்கமானது பின்னாளில் இவர்கள் இருவருக்கும் இடையே காதலாக வளர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் பின் வெளியே சென்று தனது காதலை வளர்த்துள்ளனர்.
இந்த நிலையில் சரசன் அந்த இளம் பெண்ணிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணை ஆசைக்கு இணங்க கூறியிருக்கிறார். அந்த பெண்ணும் அவர் தன்னை திருமணம் செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவரின் ஆசைக்கு இணங்கியுள்ளார். இதனை அடுத்து சில மாதங்கள் கழியவே அந்த பெண் மருத்துவமனையில் சென்று சோதிக்கையில் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை அந்த பெண் சரசனிடம் தெரிவித்துள்ளார், மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த வாலிபன் திருமண செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளான அந்த பெண் மகளீர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தபட்ட நபரான சரசனை கைது செய்து அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






