குழந்தைகள் மற்றும் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.! விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

சேலம் மாவட்டம் ஆத்தூர், அழகாபுரம் கிராமத்தை சார்ந்தவர் கார்த்திக் வயது 30. இவரது மனைவி பூமதி வயது 26. கார்த்திக் கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பூவரசன் என்ற நான்கு வயது மகனும், நிலா என்று மூன்று வயது மகளும் உள்ளனர்.

தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ள கார்த்திக் வேலைக்கு சென்று வரும் வருமானத்தை வீட்டிற்கு கொடுக்காமல் வரும் வருமானத்திற்கு மொத்தமாக குடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக அவரது மனைவியான பூமதி இவ்வாறு தினமும் குடித்து வந்தால் என்ன செய்வது குழந்தைகள் உண்ணமால் பட்டினியுடன் உள்ளனர் என்று கூறி சண்டையிட்டுள்ளார்.

அன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் கதறி துடிப்பதை கண்டும், வீட்டில் இருந்து தீ பற்றி எரிவதையும் கண்ட அங்குள்ள பொது மக்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்த காவல் துறையினர் சிகிச்சை அழிக்கப்படுவதை உறுதி செய்து விட்டு பூமதி சிறிது உடல் நலம் தேறியவுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரது கணவர் குடி போதையில் அவரின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

மறுநாள் காலையில் பூமதியும் அவரது மகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுவன் பூவரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்திற்கு காரணமான கார்த்திக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.