சுடுநீரில் இஞ்சி கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இஞ்சியின் மருத்துவ குணங்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அழகிலிருந்து ஆரோக்கியம் வரைக்கும் இஞ்சி அற்புத பல்களைத் தரும்.

இஞ்சி ஜூஸுடன் உங்கள் காலை நேரத்தை தொடங்கினால் உங்கள் வயிற்றிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவைக்கும்.

இஞ்சி ஜூஸ் செய்யும் முறை

இஞ்சியின் தோலை உரித்துவிட்டு , துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் அளவுள்ள நீரை கொதிக்க வையுங்கள்.

நீர் கொதித்ததும் இஞ்சித் துண்டுகளை அதில் போட்டு மேலும் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.பின் ஆற வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள்.

இஞ்சி ஜூஸின் மகத்துவம்

உங்களுக்கு உடல் நிலை சரியில்லாம இருந்தால், சோர்வாக இருப்பீர்கள். அந்த சமயங்களில் இது மிகவும் நல்லது.

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

தொற்று நோய்கள் கிட்ட நெருங்காது.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். குளிர் ஜுரம் அல்லது குளிரானால் நடுங்கும்போது இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சூட்டை அளித்து நடுக்கத்தை கட்டுபடுத்தும்.