இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது? எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைய போகிறார்?.

இந்த ஆண்டுக்கான( 2018 ) குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைய போகிறார் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, தசமி திதியில், சனிபகவானின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் 10.07-க்கு அமிர்த-சித்த யோகத்தில் குருபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு (விசாகம் 4-ம் பாதத்தில்) குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 2018 அக்டோபர் 11-ம் தேதி வியாழன் அன்று 4:49-க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார் குருபகவான். மேலும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி 2:39 மணி வரை குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவான் நம் உடம்பில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். எனவே, குருபகவான் சிந்திக்கும் ஆற்றலை நமக்குத் தருபவர் ஆவார். பூர்வ ஜென்ம நியாபகங்களை நமக்கு தொடர்ந்த அளிப்பவர், நல்ல நினைவாற்றலைத் தருபவரும் குருபகவான் தான். ஆனால், குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து, நீச்சமாகி பாபகிரகங்கள் பார்க்கும் போது தான், நாம் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இது “அபகீர்த்தி யோகம்” என்று கூறப்படுகிறது.

• விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் குரு பகவான் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

• விருச்சிக ராசிக்கு வரும் குரு அடுத்த விகாரி ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்.

• விருச்சிகத்தில் இருந்து தனது 5 ஆம் பார்வையால் மீன ராசியையும் – 7 ஆம் பார்வையால் ரிஷப ராசியையும் -9 ஆம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார்.