ஹெல்மெட் அணிவது கட்டாயமா?

தமிழகத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாய என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, கட்டாய ஹெல்மெட் அணிவது சட்டம் அமல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்தது.

அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், அறிக்கை திருப்தியாக இல்லை என்றும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தைப் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் முறையாக அமல்படுத்துவது இல்லை என்று தெரிவித்தனர்.

காரில் செல்லும் காவல்துறை உயரதிகாரிகள் சீட் பெல்ட் அணிவதில்லை. கட்டாய ஹெல்மெட் என்பதை நீதிமன்ற சட்டமாக பார்க்கக் வேண்டாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்க உள்ளனர். ஆகையால் மக்கள் பரபரப்பாக தீர்ப்பு எப்போ வரும் என்று காத்துக்கொண்டுள்ளனர்.