பிரபல நடிகைக்கு ரஜினி கட்சியில் புதிய பதவி..!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்து, தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று கூறினார். ஆனால், அவர் கட்சி பெயர் அறிவிக்கவில்லை. அதை, அக்டோபரில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

இதனிடையே, அவர் அடித்த அடித்த படத்தில் பிசியாக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் ரஜினி மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமித்துவருகிறார். சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போது நியமித்து உள்ளார்.

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினி நியமித்துள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்துவந்த சுகன்யாவிற்கு ‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்மூலம் சுகன்யாவிற்கு ரஜினியிடம் நல்ல அறிமுகமும் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூர் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.