தனியார் பேரூந்து- அரச பேரூந்துடன் மோதி கோர விபத்து….!!

யாழ்ப்பாணத்திலிருந்து அரச உத்தியோகத்தர்களை கொழும்பு நோக்கி ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துடன் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுப் பிற்பகல்(18) புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொள்வதற்காக யாழ். மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பெருந்தே இவ்வாறே விபத்தில் சிக்குண்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த உத்தியோகத்தரொருவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.