இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை..

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் வைத்தியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் ஆறு லீற்றர் நீர் அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியர் சமித்தி தெரிவித்துள்ளார்.

தற்போது அதிக வெப்ப நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இதனால் அதிகமாக நீர் அருந்த வேண்டியது அவசியமாகும். விசேடமாக 6 லீற்றர் நீரேனும் அருந்த வேண்டும்.

இந்த நாட்களில் சிறு பிள்ளைகளை வெளியிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம். நோய் ஏற்படுவதற்காக ஆபத்துக்கள் அதிகமாக உள்ளது.

அடிக்கடி தண்ணீரில் உடலை நனைத்து வெப்பத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இளநீர், தோடம்பழம் உள்ளிட்ட பானத்தை இந்த நாட்களில் அருந்துவது நன்மையாகும். அவசர வேலை காரணமாக வெளியே செல்வதென்றால் குடை கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் தற்போதை காலநிலை காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும்.

மதிய வேளையில் வெளியில் செல்வோர் உடலுக்கு பொருத்தமான கிறீம்களை பூசிக்கொள்ளவும். வெப்பம் தொடர்பில் அவதானமாக செயற்பட்டால் நோய்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.