இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான திரைப்பட நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.
சினிமாத்துறையில் தற்பொழுது நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் அதிலும் முதல் படம் அமைவது அபூர்வம். நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைத்து படம் வெற்றிப்படமாவது அதனிலும் அபூர்வம்.
2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை சாய்பல்லவி ஈர்த்தார். பிரேமம் படத்திற்கு பிறகு நடிகை சாய்பல்லவிக்கு ரசிகர் பட்டாளம் கூடியது.
பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள சாய்பல்லவிக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. மேலும் அவரது டிவிட்டர் கணக்கை பின் தொடர்வர்களகளின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது இதற்கு ரசிகர்களுக்குகு சாய்பல்லவி நன்றி தெரிவித்துள்ளார்.