மைத்திரியின் அதிரடி அறிவிப்பு!

வறுமையை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி நிவாரண உதவி திட்டத்தின் கீழ் மேலும் ஒன்றரை இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களினால் இதுவரை சமுர்த்தி நிவாரண உதவி கிடைக்கப் பெறாத, அதற்கு தகுதி பெற்றுள்ள மேலும் ஒன்றரை இலட்சம் குடும்பங்கள் இந்த நிகழ்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி நன்மைகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

‘பாதுகாப்பான இலங்கை – பலமான சமூகம் 2030ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கையை நோக்கி சமூகத்தை வலுவூட்டுதல்’ என்ற கருப்பொருளின் கீழ் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.