சோள மாவு = 1 கப்
சர்க்கரை = 1 கப்
பால் = 3 கப்
ஏலக்காய் பொடி = சிறிதளவு
கேசரி கலர் பொடி = 1 சிட்டிகை
உப்பு = 1 சிட்டிகை
முந்திரி = 25 கிராம்
திராட்சை = 25 கிராம்
நெய் = 100 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சோள மாவு, பால், சர்க்கரை சேர்த்து கெட்டி விழாமல் நன்றாக கலக்கவும். பிறகு இதில் கேசரி கலர் பொடியை கலக்கவும்.
முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் சோள மாவு கலவையை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறவும். கலவை கெட்டியாக வரும் போது ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும்.
பிறகு சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும். நெய் திரண்டு வரும் போது வறுத்த முந்திரி, திராட்சையை போட்டு இறக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி கலவையை கொட்டி நன்றாக ஆறியதும் துண்டுகளாக்கி சாப்பிடவும்.
மருத்துவ குணங்கள்:
சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம் அதிகமாக காணப்படுகிறது. சோளத்தில் அதிகமாக மாவுச்சத்தும் மற்றும் நார்ச்சத்தும் காணப்படுகிறது. மேலும் இரும்பு, கால்சியம் ஆகியவை காணப்படுகிறது.
இவை வயிற்றுப்புண்ணை குறைக்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும். உடல் பருமன் குறைய இது மிக சிறந்த உணவு.
மலச்சிக்கல் வராமல் தடுக்கும். உடலுக்கு வலிமை தரும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட ஏற்ற மிக சிறந்த உணவு சோளம்.







