விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ராட்சசன் படத்தின் டீசர் வெளியீடு..!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘ராட்சசன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ராட்சசன். த்ரில்லர் கதையை மையமாகவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.