வாய் துர்நாற்றம் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இதை போக்க பல்வேறு வழிகள் உண்டு. மாணவர்கள் மற்றும் அலுவலக பணிக்கு செல்பவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தினமும் தூங்கி எழுந்த உடனோ அல்லது ஒவ்வொரு முறையும் உணவு உண்ட அடுத்த 1 மணி நேரத்திற்கு பிறகு வாயில் துர்நாற்றம் ஏற்பட நேரிடும்.
நாம் பெண்களின் அருகில் பேசும் போதும் வாயில் இருந்து துர்நாற்றம் வந்தால் என்ன செய்வது.. இனிமேல் உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க இதை பின்பற்றுங்கள்.
ஆரஞ்சு, புதினா, எலுமிச்சம் இவைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு, வாய் கொப்புளிக்க துர்நாற்றம் போய்விடும்.
அதே போல், உப்பு தண்ணீரில் வாய் கொப்புளிக்க துர்நாற்றம் போய்விடும்.
தேங்காய் எண்ணெய்யைச் சிறிது எடுத்து வாயில் ஊற்றி 5 அல்லது 8 நிமிடம் கழித்து உமிழ்ந்துவிட வேண்டும். இப்படி தினமும் செய்து வர கிருமிகள் வராதாம்.
பழங்களை அடிக்கடி சாப்பிட்டுவர இந்தப் பிரச்னையில் இருந்து விரைவில் நிவாரனம் பெறலாம்.






