சென்னையில் போரூரை அடுத்த குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் தனது இரண்டு குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொன்று விட்டு, கணவரையும் கொல்ல முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து, கள்ளக்காதலன் சுந்தரம் மற்றும் அபிராமி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் விசாரணையின் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதம் வரை குழந்தைகளை பாசமாக வளர்த்து வந்த தனது காதல் மனைவி, அந்த குழந்தைகளை கழுத்தை நெரிந்து கொல்லும் அளவிற்கு சென்றது புரியாமல் அபிராமியின் கணவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
ஒரு பெண் தனது பாலியல் இச்சைக்காக தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் அளவிற்கு மன நிலையில் எப்படி மாறியிருக்கும் என்பது குறித்து மன நல மருத்துவர் ஒருவர் கூறுகையில்,
பெற்ற குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் துணிந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதலில் அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம். அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவற்றை அவர் செய்திருக்க மாட்டார்.
அவரின் மனசாட்சியை சாகடித்துவிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகும் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுலபமாகக் கிடைக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும்.
சில சினிமாப் படங்களில்தான் நல்ல கருத்துகள் உள்ளன. ஆனால், மற்ற படங்களைப் பார்த்து அதன்படி நிஜத்திலும் வாழ முடியும் எனப் பலர் கருதுகின்றனர்.
ஒரு நிமிடம் யோசித்தால் தவறுகளை தள்ளிபோட முடியும். அபிராமி வழக்கில் கணவனும் மனைவியும் வெளிப்படையாகப் பேசியிருந்தால் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு பெண்களிடத்தில் காணப்படும் ஆடம்பர மோகமே இதற்கெல்லாம் காரணம் என்பது ஒருசாரரின் கருத்து.
அபிராமி முன்னர் ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக பணி புரிந்த காரணத்தினால், ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தின் தாக்கம் மெல்ல மெல்ல அவரிடத்தில் வேரூன்றி கணவர் ஸ்கூட்டி வாங்கி கொடுத்தும், அது அடுத்தகட்ட விபரீத நிலையை அடைந்துள்ளது.
என்றைக்கு கணவரின் பொருளாதார நிலை அறிந்து, அதற்குள் குடும்பத்தை நடத்தும் மனப்பக்குவம் வருகிறதோ அன்றே மற்ற விடயங்களின் மீதான மோகம் குறைந்து விடும் என்று கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள்.






