வானத்திலிருந்து வீசப்பட்ட மீன்கள்! இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

விமானத்திலிருந்து உட்டாவில் உள்ள ஏரியில் மீன்களை வீசுகின்ற வீடியோவை உட்டா -வனவிலங்கு வளங்களின் பிரிவு தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஒரு வினோத முயற்சியாக ஏராளமான மீன்கள் விமானத்திலிருந்து ஏரியில் வீசப்பட்டுள்ளது. இந்த முயற்சி 1956- ல் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் அமெரிக்கா உட்டாவில் உள்ள ஏரியில் விமானத்திலிருந்து மீன்களை வீசுகின்ற காட்சியை உட்டா -வனவிலங்கு வளங்களின் பிரிவு தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆர்க்டிக் சாம்பல், ஸ்ப்லேக் என்ற மீன் வகைகள் இருந்தது.இது சுமார் 150 அடி உயரத்திலிருந்து வீசப்பட்டது. இதில் 95 சதவீதம் மீன்கள் உயிர் பிழைப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மீன்கள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு, மீன்களின் எண்ணிக்கை பெருக்க இங்கு இவை கொண்டு விடப்படுகின்றன. குறிப்பாக உள்னாட்டு மீன்களின் விகிதத்தை பெருக்குவதற்கு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சிறிய கண்டெய்னர்களில், குதிரைகள் மூலமோ அல்லது மோட்டர் சைக்கிள் மூலமோ எடுத்துச் செல்வதைக் காட்டிலும், விமானத்திலிருந்து பரப்புவது பாதுகாப்பாகவும், மீன்களுக்கு ஏற்படும் அழுத்ததை குறைக்கலாம். இதில் குறிப்பாக சிறிய மீன்களுக்கு தொந்தரவற்றதாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.